2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளுக்கு இலங்கை அணி நேரடித் தகுதி..

2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணி நேரடித் தகுதி பெற்றுள்ளது.

ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும்.

இந்நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது உறுதியற்றதாக இருந்தது.

எனினும், நேற்று(19) இங்கிலாந்துடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்து தரவரிசையில் பின்தள்ளப்பட்டதால், இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் இலங்கை அணியும் 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

 

(rizmira)