2019ம் ஆண்டு மாத்திரம் ஹெரோயின் 520Kg கைது…

(FASTNEWS | COLOMBO) 2019ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியலிருந்து நேற்று(24) வரையிலான காலப்பகுதிக்குள் 520.762Kg ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 6651 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த 2018ம் ஆண்டு 732.129Kg ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 40,998 சந்தேக நபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(Ifa)