2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரானது இந்தியாவில்..

2019 ஆம் ஆண்டுக்கான 12வது ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பாகவுள்ள நிலையில் குறித்த தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொதுத் தேர்தல் காரணமாக குறித்த தொடரானது தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் தலைவரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து நடாத்திய பேச்சுவார்த்தையில் ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐ.பி.எல். தொடர் தென் ஆப்பிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.