(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று(10) இடம்பெறவுள்ளது.
தீர்மானமிக்க போட்டியில் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி காப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இன்று(10) இரவு ஆரம்பமாகும் இந்த போட்டி விசாகபட்டணம் ராஜசேகரா ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஐ.பி.எல். இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.