2020 இற்கு பின்னர் தேர்தல்கள் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையின் கீழ்

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 2020ம் ஆண்டிற்கு பின்னர் இடம்பெறும் தேர்தல்கள் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையின் கீழ் நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் யோசனைகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறுவதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்தபட்டுள்ளதாகவும், கடந்த 12ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.