முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
2020 ஜனாதிபதி வேட்பாளராக தான் களமிறங்குவதாக சமூக ஊடகங்களில் பரப்பிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படும், 2020 ஜனாதிபதி பொது வேட்பாளர் குறித்த செய்தி முற்றுமுழுதாக பொய்யான பிரச்சாரம் என்றும், மக்களை அரசியல் இலாபங்களுக்காக சிலர் தூண்டி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.