
காவற்துறை அதிபர் நியமனம் சட்டவிரோதமானது – கம்மன்பில
அரசியலமைப்பு சபையினால் காவற்துறைமா அதிபர் நியமிக்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது என பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்ட அதன் பிராதன செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இன்னும் குறித்த காவற்துறை அதிபரை நியமிக்கும் நிகழ்வில் பாட்டலி சம்பிக்கவும் பங்கேற்றிருந்தார். சம்பிக்க நீதிமன்றம் மற்றும் பொலிஸாரின் விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வரும் நபர் என்ற காரணத்தினால் அவரை இந்நிகழ்விற்கு அழைப்பதையே தடை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தும் அது நடைபெறவில்லை.
மேலும், காவற்துறை அதிபர் போட்டிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருதரப்பிலும் பொலிஸ் அதிபர்கள் இருவர் இருக்கையில், இறுதியில் பூஜித் ஜயசுந்தர தேர்வு செய்யப்பட்டது சம்பிகவின் உந்துதலாலேயே எனவும் கம்மன்பில குற்றச்சாட்டொன்றையும் முன்வைத்துள்ளார்.