கண்டி இலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் இல 1040 எனும் கடுகதிப் புகையிரதம் மீண்டும் புதன் கிழமை(27) தொடக்கம் வழமையான நேரத்தில் பயணிக்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத பயணிகளின் வேண்டுகோளுக்கு அமையவே குறித்த திணைக்களம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது
மேலும் குறித்த புகையிரதமானது கண்டியிலிருந்து காலை 05.10 இற்கு பயணத்தை தொடங்கி கொழும்பு கோட்டைக்கு காலை 08.17 ற்கு பயணத்தை முடிக்கின்றது.
தற்போது புகையிரதம் கண்டியிலிருந்து காலை 04.50 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.