ரைசின் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டியின் இறுதிப் போட்டிகள் அனைத்திலிருந்தும் விலகியுள்ளார்.
ஸ்மித்திற்கு மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இவ்வாறு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளார். புனே அணியினது நட்சத்திர விளையாட்டு வீரரான கெவின் பீட்டர்சன்,டுபிளசி, மிச்சேல் மாஷ் ஆகியோரும் உபாதை காரணமாக போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர்.
மகேந்திரசிங் டோனி இனது தலைமையிலான புனே அணியில் இலங்கை வீரரான திசர பெரேரா விளையாடும் அதேவிடத்து இம்முறை புனே அணி திறமைகளை வெளிக்காட்டத் தவறியமையினால் புள்ளிவிவர அடிப்படையில் புனே அணி 6வது இடத்தில் இடம்பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.