கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்த்தனவின் வீடு நேற்று சீஐடியினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குறித்த சோதனை இடம்பெற்றது.
இதன் போது பணச்சலவை தொடர்பில் சீஐடியினர் பல ஆவணங்களை தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
2011,2012ம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்ற அடிப்படையில் லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள்இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.