பசிலினது மனைவி மற்றும் மகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

பசிலினது மனைவி மற்றும் மகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தேஜானா ஆகியோர், மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

விமானப் படையினரின் விமானங்களை, தமது தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே ஆணைக்குழுவினால் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர், என ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மே 4, 5ஆம் திகதிகளில், இதேவிடயம் தொடர்பில் ஆணைக்குழுவுவில் ஆஜராகுமாறு கேட்கப்பட்டபோதும், வெளிநாட்டில் இருந்தமையால், அவர்களால் சமுகமளிக்க முடியவில்லை என அவர் கூறியிருந்தார்.

மேலும் புஷ்பா ராஜபக்ஷ காலையிலும், மகள் தேஜா ராஜபக்ஷ பிற்பகலிலும் ஆஜராக வேண்டுமென அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில், பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னர் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.