அமைச்சர் சரத் பொன்சேகா, தம்மிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டதாக அவன்ட்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
பனாமா ஆவணம் வெளியானதையடுத்து சரத் பொன்சேகா, நிஷங்க சேனாதிபதி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.
இந்நிலையில் தம்மிடம் இருந்து 35 மில்லியன் ரூபாய் பணத்தினை லஞ்சமாக பெற்றுக்கொண்டமை தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா விசாரணைக்கு தயாராக வேண்டும் என சேனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமது நிறுவனத்தை பொறுத்தவரை, கடல்கடந்த கணக்குகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.