தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு அதிகளவிலான அமைச்சர்களை நியமிக்கும் தீர்மானத்தை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித தேரர் கடுமையாக சாடியுள்ளார்.
அதிகளவிலான அமைச்சர்களை நியமிப்பது கேலிக்கைக்குரியதாகும் என தெரிவித்தார்.
மேலும்,மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காரணமில்லாமல் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமித்ததாகவும், ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதே தவறுகளை விடமாட்டார் என தான் நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இவ்வாறு சென்றால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதில் பெரியளவில் ஆச்சரியம் இல்லையென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தேசிய அரசாங்கம் ஒன்று அமையும்போது எத்தனை அமைச்சர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று 19ஆவது திருத்த சட்டத்தில் சரியாக குறிப்பிடப்படவில்லை, அது இரு கட்சிகளின் தீர்மானம் எடுப்பவர்களாலேயே முடிவுசெய்யப்படும் எனவும் சோபித்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
(riz)