23 திங்களன்று அரச விடுமுறை இல்லை

எதிர்வரும் திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசாக் போய தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது.

எனினும் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமான அனர்த்த காலநிலையைக் கருத்திற்கொண்டு திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் முடிவை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.