லசந்த கொலை – கேர்ணல் உட்பட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஐவருக்கு தொடர்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கொழும்பு முத்தையா வீதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கேர்ணல் உட்பட 5 புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லசந்த விக்ரமதுங்க 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது தெஹிவளை அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசரணைகளை நடத்தி வருகிறது.

40 மில்லியனுக்கும் அதிகமான தொலைபேசி தரவுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் மேற்படி கேர்ணல் உட்பட சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் விரைவில் இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட உள்ள சந்தேக நபர்கள் மூலம் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் இதுவரை வெளியாகாத தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.