
நிதியமைச்சர் ரவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக வாக்களிக்கும் – துமிந்த
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக இன்று கூட்டு எதிர்க்கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நிதி அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டதல்ல.
இன்னும், கட்சியின் மத்திய செயற்குழுவினாலோ அல்லது கட்சியின் நாடாளுமன்றக் குழுவினாலோ நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து யோசனை முன்வைக்கப்படவில்லை.
அரசியல் ரீதியான குரோதத்தை பழி தீர்க்கும் நோக்கில் குறித்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.