(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (கடவுச்சீட்டு அலுவலகம்) தற்போது மிகவும் பரபரப்பான இடமாக இருப்பதால் அதனை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் முன்வைத்துத்துள்ளார்.
இதற்குத் தேவையான மனித வளங்கள் தயார்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறிய அவர் , திணைக்களத்தின் கணினி அமைப்பு மந்தகதியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.