வயதில் 25 இற்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்தக் கோரிக்கையை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்களின் சங்கத்தலைவர் கே.டி.அல்விஸ், அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கோரிக்கையில் மேலும் தெரிவிப்பதாவது, 25 வயதுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் பொது மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு மூன்றாண்டுகள் பரீட்சார்த்தக் காலம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
தற்போது இலங்கையில் அளவுக்கு அதிகமாகவே முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2020ம் ஆண்டளவில் முச்சக்கர வண்டி காலணியாக இலங்கை மாற்றமடையும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணசபையினால் முச்சக்கர வண்டிகள் பதிவுக்கு உட்படுத்தப்படுவது சரியான விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் வெளிப்பிரதேச முச்சக்கர வண்டிகள் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதனை கட்டுப்படுத்த முடியும் என கே.டி.அல்விஸ் மேலும் தெரிவித்துள்ளார்.