25 வயதில் குழந்தையை போல் இருக்கும் பெண்: விநோத நோயால் பாதிக்கப்பட்ட அவலம்

இந்­திய ஜார்கண்ட் மாநி­லத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் விநோத நோய் கார­ண­மாக எலும்­பெல்லாம் சுருங்கி குழந்­தையை போல் உள்ளார்.

இந்­தி­யாவின் ஜார்கண்ட் மாநி­லத்தில் உள்ள சத்ரா என்ற கிரா­மத்தை சேர்ந்­தவர் குமரி குந்தி (வயது 25). பிறக்­கும்­போது அனை­வ­ரையும் போல் இயல்­பாக பிறந்த இவ­ருக்கு 9ஆவது வயதில் இடது காலில் பாதிப்பு ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்சை பெற சென்­றுள்ளார். எனினும் அவ­ரது கால்கள் தொடர்ந்து பல­வீ­ன­ம­டைய ஆரம்­பித்­துள்­ளது.

இந்­நி­லையில் தற்­போது அவ­ரது கால் எலும்­புகள் மட்­டு­மின்றி உடலில் உள்ள பெரும்­பா­லான எலும்­புகள் சுருங்­கி­யுள்­ளன.

இதன் கார­ண­மாக 4 அடி உயரம் இருந்த அவர் தற்­போது 2 அடி உய­ரத்­துக்கு சுருங்­கிப்­போ­ன­துடன், படுத்த படுக்­கை­யா­கவே மாறிப்­போனார்.

அவ­ரது நிலை குறித்து மருத்­துவர் ஒருவர் கூறு­கையில், குமரி விநோத எலும்பு அரிப்பு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ளார்.

Osteogenesis imperfecta என அழைக்­கப்­படும் இந்த நோய் கார­ண­மாக அவ­ரது எலும்­புகள் சுருங்­கி­யுள்­ளன. இதனை முழுதும் குணப்­ப­டுத்த முடியாது என்றாலும் அவரது வலியை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.