25,000 தண்டப்பணத்திற்கு யார் காரணம்? சுற்றி வளைத்து கேட்கப்பட்ட கேள்விகள்? அமைச்சரின் பதில் என்ன?

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட வேண்டும் என்ற முடிவை மூவர் இணைந்து எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நிதிஅமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இந்த முடிவை போக்குவரத்து அமைச்சு, பொலிஸ், மற்றும் நிதிஅமைச்சும் இணைந்து எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

வாகனங்களை வலது பக்கத்தால் முந்திச் செல்வதற்கு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சுக்கும் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பாக பேசப்பட்டதாகவும். இதன்போதே குறித்த தண்டப்பணம் விதிப்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இவ்வாறான குற்றங்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் என்பது நடைமுறைக்கு சாத்தியமானதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

வலது பக்கத்தால் முந்திச் செல்வதற்குரிய தண்டப்பணத்தை போக்குவரத்து அமைச்சே கொண்டுவந்தது. இவற்றின் மூலம் போக்குவரத்து நீதியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கம் எனவும் நிதி அமைச்சர் பதில் கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டது.

நாம் அரசியல் கோட்பாடுகளை மீறும் செயல்களை ஒருபோதும் செய்யமாட்டோம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கே முயற்சிகள் எடுப்பதாகவும், மற்றவர்கள் சொல்லும் குறைபாடுகள் எமக்கு பெரிய விடயம் இல்லை என்றும் தெரிவித்தார்.

குறித்த ஊடகசந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் இந்த தண்டப்பணம் அதிகரிப்பு தொடர்பாக நிதி அமைச்சரை சுற்றிவளைத்து அடுத்தடுத்த கேள்விகளை முன்வைத்தனர். எனினும் அனைத்து கேள்விகளுக்கும் நிதி அமைச்சர் தமது பதிலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.