25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் இம்மாத இறுதிக்குள்..

போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பில் 25,000 ரூபா வரையில் தண்டப்பணம் அறவிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஏற்பாடுகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும், சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)