மணிரத்னம் இயக்கி, ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த படம் தளபதி. இப்படம் திரைக்கு வந்து 26 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.
தமிழ் அல்லது மலையாளத்தில் இப்படம் உருவாகவில்லை, மாறாக மராட்டிய மொழிப்படமாக உருவாகிறது. தளபதி படத்தை பொறுத்தவரை மகாபாரதத்தில் வரும் துரியோதனன், கர்ணன் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்தது. புதிய மராத்திய படமொன்றை பாலகிருஷ்ணா சர்வே என்பவர் தயாரிக்கிறார்.
ரஜினியிடம் மராத்திய படத்திற்காக அவர் கால்ஷீட் வாங்கியிருக்கிறாராம். தீபக் பாவே இயக்குகிறார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மம்மூட்டி, ரஜினி இணைந்து நடித்த தளபதி படத்தை பொறுத்தவரை இரண்டு கிளைமாக்ஸ்கள் இப்படத்திற்காக படமாக்கப்பட்டிருந்தது.
ஒரு கிளைமாக்ஸில் ரஜினி இறப்பதுபோலவும் மற்றொன்றில் உடலில் குண்டு துளைத்திருந்தாலும சிகிச்சைக்கு பிறகு அவர் கண் விழிப்பதுபோலவும் காட்சிகள் படமாக்கப்பட்டது. ரஜினி உயிர் பிழைக்கும் காட்சியையே ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ரஜினி தற்போது ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அம்பேத்கர் வேடத்தில் மம்மூட்டி நடிக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.