கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் விநியோக குழாயில் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், துறைமுகத்தின் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட 90 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் இறக்கப்படும் போது குறித்த குழாய் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக லங்கா மசகு எண்ணெய் தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.
தரக்குறைவான எண்ணெய் குழாய் கொண்டு வரப்பட்டமையால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் ,எரிபொருள் இறக்கும் நடவடிக்கைகள் தாமதமானால், கப்பலுக்காக நாள் ஒன்றுக்கு பாரியளவில் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்