கொழும்பு நகர் அண்டிய பிரதேசங்களில், மின்சார கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக, எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடைக்கிடையே மின்சார விநியோகம் தடைப்படும் என, மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை, கொழும்பு 03, கொழும்பு 04, கொழும்பு 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பகுதிகளுக்கு மின்சார விநியோகம் தடைப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்னும், மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடைக்கிடையே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.