நாடாளுமன்றின் சில முக்கிய இடங்களில் சீ.சீ.ரீ.வி கமெரா பொருத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தின் சில முக்கியமான இடங்களில் இவ்வாறு கமெரா பொருத்தப்பட உள்ளதாக பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றை பார்வையிட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால், பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இவ்வாறு கமெரா பொருத்தப்படுகின்றது.
மக்கள் பிரவேசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட வேண்டுமென பொலிஸார் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரவேசிக்கும் அனைத்துப் பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் இந்த கமெராக்கள் பொருத்தப்பட உள்ளன.
மேலும், நாடாளுமன்றில் தற்போது காணப்படும் கமெரா கட்டமைப்பை அகற்றி டிஜிட்டல் ரக கமெராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற வளாகத்திற்குள் பல்வேறு விடயங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.