பள்ளிவாசலை தாக்கிய இருவர் கைது

 

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பொரள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் பொரள்ளை பிரதேசத்தைச் சேர்தவர் எனவும், அடுத்தவர் நாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது