சென்னை, தாம்பரத்தில் இருந்து பயணமாகிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று மாயமாகியுள்ளது.
குறித்த 29பேருடன் அந்தமான் புறப்பட்ட மேற்படி விமானம், நடுவானில் மாயமாகியுள்ளது.
இன்று காலை 7.30க்கு புறப்பட்ட விமானம், கடைசியாக 8.12 மணிக்கு ராடார் கருவியில் தெரிந்தது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வங்கக் கடலுக்கு மேலே சென்ற போதே விமானம் மாயமாகியுள்ளது. காணாமல் போன விமானப்படை விமானம் ஏ.என் – 32 வகையை சேர்ந்தது ஆகும். இந்த விமானம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. விமானத்தை தேடும் பணி சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் நடைபெற்று வருகிறது.