3வது டெஸ்ட், வெற்றி – தோல்வியின்றி 2-0 என்ற நிலையில் ஆட்டம் நிறைவுக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நேற்று இந்த தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி மழையால் வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 416 ஒட்டங்களையும், இலங்கை 288 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.
இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 233 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 362 ஓட்டங்கள் தேவை என்றை இலக்கை நிர்ணயித்தது.
இதன்படி இலங்கை அணி 1 விக்கட்டை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
போட்டி நாயகனாக ஜொனி பெயஸ்டோவ் தெரிவான அதேநேரம், தொடர் நாயகர்களாக ஜொனி பெயாஸ்டோவ் மற்றும் கௌசல் சில்வா ஆகியோர் தெரிவாகினர்.