வடக்கு ,வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பிரதேசங்களில் வெப்பமான காலநிலை நிலவக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.
இதேவேளை, இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை பெய்யகூடும் என்றும், அதனை தொடர்ந்து வெப்ப நிலை தணியக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் வெப்பமான காலநிலையின் போது கூடுதலாக நீரை பருகுவது அவசியம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.