ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஹூசைன் போல்ட் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 9.81 செக்கன்களில் இந்த தூரத்தை ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
100 மீற்றர் ஓட்டத்தில் தொடர்ந்து 3 முறை தங்கம் வென்று போல்ட் ‛ஹாட்ரிக்’ சாதனை புரிந்தார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 7 தங்கப் பதக்கங்களை உசேன் போல்ட் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் (9.89 வினாடிகள்) வெள்ளியும், கனடாவின் ஆன்ட்ரே டி கிரேஸ்(9.91 வினாடிகள்) வெண்கலமும் வென்றனர்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=Bs0JnWeUtDY” width=”560″ height=”315″]
[youtube url=”https://www.youtube.com/watch?v=aqha5sM_TmU” width=”560″ height=”315″]