3, 850 விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு நியமனம்…

(FASTNEWS|COLOMBO) விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்கள் 3,850 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் மே மாதம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய பாடசாலை மாணவ மாணவியருக்கு வர்ண விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறையில் திறமை சாலிகளை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் கூறினார்.