பெல்ஜியம் நாட்டு கல்லூரியொன்றில் முஸ்லிம் மாணவிகள் நீண்ட ஆடைகள் மற்றும் காட்சட்டை அணிந்து வந்தமைக்காக அவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கல்லூரி அதிபர் கூறுகையில்; இவ்விதியானது நன்கு ஆராயப்பட்டே எடுத்த முடிவாகும். எங்களுக்கு இக்கல்லூரியினுள் நீண்ட காட்சட்டைகளையோ, பாவாடைகளையோ அல்லது நீண்ட ஆடைகளையோ அனுமதிக்க முடியாது.
மேலும் இங்கு நீளமாய் உள்ள ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனக்கூறியே மேற்படி முஸ்லிம் மாணவிகளை வீட்டுக்கு திருப்பியனுப்பியதாக கூறப்படுகின்றது.
இவ்விதமே பிரான்ஸ் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முஸ்லிம் மாணவியொருவரை வீட்டுக்கு திருப்பியனுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.