பெறுமதி சேர் வரி திருத்தச்சட்டமூல விவாதம் நாளை நாடாளுமன்றில்..

பெறு­மதிசேர் வரி திருத்­தச்­சட்­ட­மூலம் நாளை(26) நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

பெறு­மதி சேர் வரி தொடர்­பான சட்­ட­மூலம் திருத்தம் செய்­யப்­பட்டு நாடாளுமன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.  அவ்­வ­கையில்   நாளை  விவா­தத்­திற்கு எடுத்­துக் ­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் பெறு­மதிசேர் திருத்­தச் சட்டமூலத்திற்கு எதி­ராக  நான்கு மனுக்கள்    உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனினும் இது­கு­றித்­தான தீர்ப்பு இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. இந்நிலையில் ‍ஒன்­றி­ணைந்த எதி­ரணி மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் எதிர்ப்­புக்கு மத்­தியில் பெறு­மதி சேர் திருத்­தச்­சட்­ட­மூலம் நாளை(25) விவாதத்திற்கு எடுத்­துக் ­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

பெறுமதிசேர் வரி (வற்வரி) விதிப்பானது கடந்த மே மாதம்  2ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.   எனினும் ஒன்றிணைந்த எதிரணி  நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்ததன் காரணமாக தற்காலிகமாக  வரி விதிப்பினை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. அதன்படியே தற்போது திருத்தப்பட்ட சட்டமூலம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.