பந்தை சேதப்படுத்திய விவகாரம் -தீர்ப்பை முழுமையாக நிராகரிக்கிறதாக டுபெலிசிஸ் அறிவிப்பு.

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், இனிப்பொன்றைப் பயன்படுத்திப் பந்தை மினுங்கச் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில், தென்னாபிரிக்க அணித் தலைவர் ஃபப் டு பிளெஸி, குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

இக்குற்றம் தொடர்பாகப் போட்டித் தடையிலிருந்து தப்பிய டு பிளெஸிக்கு, அவரது போட்டி ஊதியத்தின் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

வாயில் இனிப்பொன்றை வைத்துக் கொண்டு, பந்தை அவர் மினுக்கும் காணொளி, ஊடகங்களில் வெளியானது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=DK2QlfPH6hM” width=”560″ height=”315″]

இதைத் தொடர்ந்து, அவர் மீது சர்வதேச கிரிக்கெட் சபையால் குற்றஞ் சுமத்தப்பட்டது. எனினும், குற்றச்சாட்டை அவர் ஏற்காமையால், அது தொடர்பான விசாரணை இடம்பெற்றது.

தொலைக்காட்சிக் காணொளிகளைப் பார்வையிட்ட சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்ஸன், ஃபப் டு பிளெஸி மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார்.

விசாரணைகளில் டேவிட் றிச்சர்ட்ஸனின் தரப்பினதும் ஃபப் டு பிளெஸியின் தரப்பினதும் மெரிலிபோன் கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் பகுதிக்கான தலைவர் ஜோன் ஸ்டெஃபென்ஸனினமும்  வாதங்களைக் கேட்ட போட்டி மத்தியஸ்தர் அன்டி பைகுறொப்ட், இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

இது தொடர்பான விசாரணையில், அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அதைத் தொடர்ந்தே அபராதம் விதிக்கப்பட்டது. அத்தோடு, தவறான புள்ளிகளாக அவருக்கு 3 புள்ளிகள் சேர்க்கப்பட்டன. 24 மாதகாலத்தில், 4 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை அவர் அடைவாராயின், போட்டிகளிலிருந்து அவர் தடை செய்யப்படுவார்.

எனினும், இந்தத் தீர்ப்புக்கெதிராக, ஃபப் டு பிளெஸி மேன்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருக்குப் போட்டித்தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி காணப்பட்ட நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொண்டார். இதனால், நாளை ஆரம்பிக்கவுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவுள்ளார்.

இதற்கிடையே தனக்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக டுபெலிசிஸ் ஏமாற்றம் அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “பந்தை நான் சேதப்படுத்தவிலலை. ஐ.சி.சி. குழு பந்தை சேதப்படுத்தியதாக விதித்த தீர்ப்பை முற்றிலும் நிராகரிக்கிறேன். இதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. நான் எந்த தவறும் செய்யவில்லை” என்றார்.