போக்குவரத்து ஓழுங்கு மீறல்களுக்கு எதிராக புதிதாக அரசாங்கம் அறிமுகப்படுத்திய 25,000 ரூபா தண்டப்பணச் சட்டத்தில், எந்தவித மாற்றங்களையும் செய்யாதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மது போதையில் வாகனம் ஓட்டுதல், வேகக் கட்டுப்பாட்டை மீறல்,சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனத்தைச் செலுத்துதல், இடதால் முற்படுத்துதல், காப்புறுதிப் பத்திரம் இன்றியிருத்தல், பாதுகாப்பற்ற முறையில் ரயில் கடவையில் செல்லுதல், வாகன சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை வழங்குதல் போன்ற குற்றங்களுக்கு இந்த தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் குறித்து அமைச்சரவையில் மறுபரிசீலனை செய்யப்பட்டது. தண்டப் பணத்தில் மாற்றம் கொண்டு வராதிருக்க இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
இருப்பினும், இடதால் முற்படுத்துதல், வேகக் கட்டுப்பாட்டை மீறல் போன்ற குற்றங்களுக்கான தண்டப் பணம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.