கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாலாஜி..

2017ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சென்னையை சேர்ந்த எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சென்னையை சேர்ந்த எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். எல்.பாலாஜி கடந்த ஆண்டு முதல் தரபோட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போதைய தமிழக அணிக்கு பந்துவீச்சு பயிற்சியில் உதவியாக இருந்து வருகிறார்.

அவர் 2011 முதல் 2013 வரையில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இதில் 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கொல்கத்தா கைப்பற்றி இருந்தது.