(FASTNEWS|COLOMBO) குருந்துகஹஹெதப்ம பகுதியில் வாகன திருத்தும் நிலையம் ஒன்றிலிருந்து சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 600 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு(18) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.