35 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதான யோசனை நிராகரிப்பு…

35 வயதுக்கு குறைவானவர்களுக்கு முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்காமலிருப்பது தொடர்பிலான யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

பெரும்பான்மையான அமைச்சரவை உறுப்பினர்களின் எதிர்ப்பின் மத்தியில், குறித்த யோசனை நிராகரிக்கப்பட்டதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.