பொலன்னறுவை, ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
சுமார் 60 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கிரிக்கெட் மைதானத்துக்கு ஹிங்குராங்கொடையில் உள்ள அரச விவசாய பண்ணைக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தை பார்வையிடுவதற்கான திலங்க சுமதிபால உள்ளிட்ட குழுவினர் அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இந்த மைதானத்தின் நிர்மாணம் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

