தேர்தலுக்கு நாம் எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளோம் – மஹிந்த…

தேர்தலுக்கு நாம் எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளோம் – மஹிந்த…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டுமாயின் அரசாங்கம் அது குறித்த சட்டத் திருத்தங்களையும் வர்த்தமானி அறிவிப்பினையும் வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று(08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேர்தல் சட்டத்தின் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு தீர்வு காணப்பட்டு, நாடாளுமன்றில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த முடியும்.

போட்டியை நடத்த வேண்டுமாயின் ஆடுகளத்தை சரியாக செய்ய வேண்டும். ஆடுகளத்தை உரிய முறையில் செய்து கொடுத்தால் போட்டியை எப்போதும் நடத்த நாம் தயார் நிலையிலேயே உள்ளோம்.

தேர்தலை நடத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத போதிலும் தேர்தல் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டால் நிதியை வழங்க முடியும் என திறைசேரி இணங்கியுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.