
உண்டியல் குலுக்கிய விமல் 100 கார்கள் வாங்கியது எவ்வாறு?
சமவுடமை, சோஷலிஷம் பேசி உண்டியல் குலுக்கி அரசியலுக்கு வந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று பெயர் சொல்லக்கூடிய ஒரு கோடீஸ்வரர். இவரது சிகை அலங்காரத்துக்காக அமெரிக்காவிலிருந்து ஒரு விசேட வகை ஜெல் தருவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது அவர் 100 இற்கு மேற்பட்ட வாகனங்களைப் பாவித்து நாட்டு மக்களின் பணத்தை சூரையாடியுள்ளார்.
உண்டியல் குலுக்கி அரசியலுக்கு வந்த இவர் இந்தளவு சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள கேள்வியெழுப்பினார்.பலாங்கொடை அல்தொரதென்ன வீடமைப்புத்திட்டத்தை நேற்று(10) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நல்லாட்சி அரசு அரசியல் பழிவாங்களில் ஈடுபட்டுள்ளதாக
சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் இவர் பொது மக்களின் வரிப்பணத்தை சூரையாடியமையாலேயே இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர். பலாங்கொடையில் இரத்தினபுரி மாவட்டத்தில் பொது மக்களுக்காக வீடு கட்டுவதற்காக ஒரு அடிக்கல்லையாவது நாடாத விமல் வீரவங்ச பொது மக்களின் பணத்தை இப்படி சூரையாடலாமா?
அது மட்டுமா? கடந்த காலங்களில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர் அரச ஊழியர்கள் சொந்த அரசியலுக்கு பயன்படுத்தினர், இன்று அரச ஊழியர்கள் சுதந்திரமாக வேலை செய்கின்றனர். தந்தையின் வழியில் அரசியல் செய்யும் வீடமைப்பு அமைச்சர் இன்று கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செல்லப்பிள்ளை. அன்று எமது கட்சியை துண்டாட மஹிந்த ராஜபக்ஷ போட்ட சதித் திட்டங்கள் இன்று கைகூடவில்லை என்றார்.
