IPL ஏலத்தில் விலைபோன அசேல குணரத்ன, மஹேலவுடன் இணைகிறார்…

IPL ஏலத்தில் விலைபோன அசேல குணரத்ன, மஹேலவுடன் இணைகிறார்…

அவுஸ்திரேலியாவுடனான T-20 தொடரில் சோபித்து வரும் சகலதுறை வீரர் அசேல குணரத்னவும் IPL இல் ஏலம் போயுள்ளார்.

IPL T-20 போட்டித் தொடரின் வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் நேற்று(21) இடம்பெற்றது

அசேல குணரத்னவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் வாங்கியுள்ளது. இந்திய நாணயத்தில் அவர் 30 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளரான மஹேல ஜயவர்தனவே குணரத்னவின் பெயரை பரிந்துரைத்துள்ளார். குணரத்ன ஐ.பி.எல் ஏலத்திற்கு முந்தைய தினம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் அதிரடியாக 84 ஓட்டங்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.