
உலகின் முன்னணி இடத்தில் இருந்த கொழும்பு பங்கு சந்தை பாரிய வீழ்ச்சியில்..
உலகின் முன்னணி பங்கு சந்தையாக திகழ்ந்த கொழும்பு பங்கு சந்தை தற்போது பாரிய பின்னடைவை சந்திள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2010 ஆம் ஆண்டு முன்னணி பங்கு சந்தையாக கொழும்பு பங்கு சந்தை காணப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற Bloomberg நிறுவனத்தினால் குறித்த விபரம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் தற்போது கொழும்பு பங்குச்சந்தை ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளை விடவும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பிராந்திய நாடுகளுக்குள் குறைந்த வளர்ச்சியை காட்டும் பங்கு சந்தையாக மாறியுள்ளது.
அன்று உலகின் முன்னணி இடத்தில் இருந்த கொழும்பு பங்கு சந்தை மிக விரைவான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டு முதலீட்டுகளை நீக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
நாட்டின் பங்கு சந்தை பொருளாதாரத்தை மதிப்பிடுகின்றமையினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
(rizmira)