4 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்படமாட்டாது…

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

போலி பிரசாரங்களை ஊடகங்களின் மூலம் வழங்குவதன் ஊடாக முழு பாடசாலை கட்டமைப்புக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்தினார்.

4 ஆம் திகதி பாடசாலை மூடப்படுமென வெளிவரும் தகவல்களால் 42 இலட்ச மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், தொழிற்சங்கங்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனிநபர்களின் அரசியல் தேவைகளுக்காக கல்வியுடன் விளையாடுவதை தவிர்க்குமாறு சகலரிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.