ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(11) 4 வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றதாக ரயில் இயந்திர இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் எந்தவொரு ரயில்களும் சேவையில் ஈடுபடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, இன்று(11) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த 8 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பணிப்புறக்கணிப்பில் நேற்றைய தினம்வரை சில விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், இன்றைய தினத்தில் இருந்து அலுவலக பணியாளர் ரயில்களும் சேவையில் ஈடுபடாதென ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்றைய தினம் அறிவித்திருந்தன.
எவ்வாறெனினும், அனுமதி வழங்கப்படும்பட்சத்தில் எந்தவித சிக்கல்களும் இன்றி சேவையை முன்னெடுக்க தயாராக இருப்பதாக ரயில் செலுத்துனர்களின் உதவியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது