இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்தியூஸ் உடற்பயிற்சி செய்யும் காணொளி ஒன்றை தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
‘உலகம் கொடூரமாக இருந்தாலும், நீங்கள் ஒன்றை அடைய நினைத்தால் அதனை யாராலும் தடுக்க முடியாது’ என அதில் அவர் பதிவிட்டு இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்.
எனினும், இலங்கை அணியின் வீரர்களின் உடற்பயிற்சியை மேம்படுத்த அவர்கள், இராணு முகாமில் பயிற்சி பெற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.