ஊடகங்களுக்கு அனுமதியின்றி கருத்து வௌியிட்டமை தொடர்பில் லசித் மாலிங்கவிற்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு , தான் அதற்கு உடன்படவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திற்கு நபரொருவர் விடுத்திருந்த கேள்விக்கு பதிலளித்த போதே மஹேல குறித்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்க அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளின் படி, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கால இடைக்காலத் தடை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு..
லசித் மாலிங்கவுக்கு ஓராண்டுத் தடையும், அபராதமும் விதிப்பு..