உமா ஓயா பிரதேசத்திற்கு அமைச்சரவைக் குழு இன்று விசேட மேற்பார்வை விஜயம்..

உமா ஒயா செயற்றிட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று(03) உமா ஒயா செயற்றிட்ட வளாகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

சில வீடுகளின் கூரைகளிலிருந்து நீர் கசியும் நிலை குறித்து இந்த உபகுழு விசேட ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்கு மேலதிகமாக இந்த செயற்றிட்டத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் குறித்தும் விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை உபகுழு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த விசாரணைகளின் அறிக்கைகளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பது உபகுழுவின் நோக்கமாகும்.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்த அமரவீர மற்றும் விஜித் விஜயமுனி சொஸ்சா ஆகியோர் இந்த அமைச்சரவை உபகுழுவில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)