412 கிலோ உடல் எடையுடைய இங்கிலாந்து வாலிபர் மரணம்

பிரிட்டனில் அதிக உடல் எடை கொண்ட இளைஞர் காலமானார். 33 வயதான அவர் 412 கிலோ அளவுக்கு அதிக மான உடல் எடை கொண்டிருந்தார். அவரது உதவிக்கு எப்போதும் இரண்டு பேர் உடன் இருந்தனர்.

தனது 17 வயதில் கென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் கார்ல் தாம்சன் பணியாற்றி வந்தார். அப்போது ஹோட்டலில் விற்காத பொருட்கள் அனைத்தையும் சாப்பிட்டு விடுவாராம். அப்போது முதலே அவரது உடல் எடை தாறுமாறாக அதிகரித்தது.

எழுந்து நடக்க முடியாமல் கடந்த ஓராண்டாக வீட்டிலேயே முடங்கி இருந்தார். அவர் உடனடியாக 285 கிலோ உடல் எடையைக் குறைத்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் நாள்தோறும் 10 ஆயிரம் கலோரி அளவுக்கு அவர் உணவுகளை உட்கொண்டார். அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை

இதையடுத்து நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள், போலீஸார் சேர்ந்து பல மணி நேரம் போராடி அகற்றினர்.