சனத் ஜயசூரிய அரசியலை கைவிடுவாரா

சனத் ஜயசூரிய அரசியலை கைவிடுவாரா

முன்னாள் பிரதி அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய தற்போது பாகிஸ்தானில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த 16ஆம் திகதி பாகிஸ்தான் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற கிரிக்கெட் போட்டியை விமர்சனம் செய்வதற்கே அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

சனத் ஜயசூரிய நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளூராட்சி மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக கடந்த ஜுன் மாதம் 10ஆம் திகதி பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

கடந்த 15ஆம் திகதி அவர் தனது கடமையை பொறுப்பேற்ற பின்னர் அதற்கு மறுதினமே பாகிஸ்தான் சென்றுள்ளார்.

தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் பொதுத் தேர்லுக்கு ஆயத்தமாக இருப்பது போன்று தெரியவில்லை என அவரை நாடாளுமன்றத்திற்கு நியமித்த மாத்தறை மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.